தேனி மாவட்டம் கம்பம் அன்பு அறம் செய் சார்பாக பசுமை தீபாவளி வரவேற்கும் விதமாக பனை விதை நடவு நிகழ்ச்சி

கம்பம் பதினெட்டாம் கால்வாயில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ப.சரவணன் முன்னிலையில் பசுமை தீபாவளியை பனை விதை விதைத்து வரவேற்கப்பட்டது.

பனை விதை விதைப்பதற்கான காரணத்தை விழா ஏற்பாட்டாளர் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜாவிடம் கூறுகையில் பனை விதைகளைப் பற்றி கூறும் போது பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும்,நீர் மேலாண்மையில் முதன்மை மரமாகும், இது சல்லி வேர்வகைச் சார்ந்த பேரின புல் வகை ஆகும், இன்று விதையாய் விதைப்பது பூமியிலிருந்து முளைத்து வருவதற்கு ஒன்றாய் வருடங்கள் ஆகும், இதனுடைய ஆயுள் காலம் 130 வருடங்கள் ஆகும்,இடி மின்னலில் இருந்து நம்மை காக்கின்றது,கடலோர மாவட்டங்களில் மண்ணரிப்பை தடுத்தும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் நிலைத்து நின்ற மரம் பனைமரம்,உச்சி முதல் வேர் வரையிலான அனைத்துமே மனிதனுக்கு பயன் தரக்கூடிய மரமும் பனைமரம் என்று பனைமரத்தை பற்றி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கூறுகையில் விபத்தில்லா தீபாவளியை மாணவர்களும், பொது மக்களும் கொண்டாட வேண்டும். அதே போன்று தமிழக அரசின் ஆணைப்படி இரண்டு மணி நேரம் மட்டுமே தீவாளி நாளில் வெடி வெடிக்க வேண்டும், அதில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடி வெடித்து அரசின் ஆணையை மதித்து நடந்து காற்று மாசுபாட்டை தடுத்தும், சுற்றுச்சூழலை பாதுகாத்தும் பசுமையான தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கம்பம் ஏல விவசாயிகள் பள்ளி தலைமையாசிரியர் சையது அபுதாஹிர், சுருளிப்பட்டி சிவாஜி ஆசிரியர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாண்டி ஆசிரியர்,சங்கமம் அறக்கட்டளை இயக்குனர் சுரேஷ்குமார், சோலைக்குள் கூடல் இளம்குரல் செய்தி தேனி மாவட்டம் துணை ஆசிரியர் DTKP.சிவா, மூர்த்தி, பிரகலாதன் வார்டு செயலாளர் , முருகன், அப்துல் ஆசிக் சிறுபான்மையினர் பிரிவு, நவநீதி சஞ்ஜீவி,வேல் சரண், சங்கீத், முகம்மது அப்ரித் மற்றும் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்யப்பட்டது.