விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் – செத்தவரை கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் பெருமான் திருக்கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா பிப்பிரவரி 15 மாலை 6 மணிமுதல் மறுநாள் பிப்பவரி 16 காலை 6மணி வரை இரவு முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ
சிவஜோதி மோன சித்தர் ஐயா அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற மகாசிவராத்திரி பெருவிழாவில்

பிப்பவரி 15 மாலை 6 மணி அளவில் கைலாய வாயில் சிறப்பான பூஜைகளுடன் திறக்கப்பட்டு அந்த வழியாக பொதுமக்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை 6 மணி அளவில் சிறப்பு பூ அலங்காரத்தில் மேள தாளங்கள் கைலாயம் வாத்தியம் முழங்க ஆன்மீக நடனத்துடன் சொக்கநாதர் மீனாட்சியம்மன் மாடவீதி உலா அர்த்தநாரீஸ்வரர்
தங்கத்தேரில் பவனின் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

மேலும் மகா சிவராத்திரி 
இரவு முழுவதும் 8 மணி 11 மணி 2மணி 4மணி என நான்கு கால பூஜைகள் விமரிசையாக நடைபெற்று.

இரவு 11 மணி 2ஆம் கால பூஜையில் ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் திருகரங்களால் பால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தார் ஐயா அவர்களின் வேல்வியும் பூஜை மற்றும் கோபூஜையும் நடைபெற்றது.

இந்த மகா சிவராத்திரி 
பெருவிழாவில் சென்னை, பாண்டி, திருவண்ணாமலை, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி வேலூர் , கர்நாடகா, ஆந்திரா, மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளின் இருந்தும் சிவனடியார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரி பெருவிழாவில் சுமார் 10000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நாள் முழுவதும் வழங்கப்பட்டது.

மாக சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் ஐயா அவர்கள் அருளாசி வழங்கினார்.