தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவிகள் ஆர்த்தி , அன்பழகி ,தனுஶ்ரீ,
கௌசிகா, மதுமதி, நிலாஶ்ரீ., பிரியதர்ஷினி,
சாகித்யா, சுமயா. ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் பெரும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றார்கள். குரும்பபட்டி கிராமத்தில் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுபடுத்தும் முறை பற்றிய தகவல்களை பகிர்ந்து செய்முறை விளக்கம் அளித்தனர்.