சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த மாடலிங் பேஷன் ஷோ
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியா வணிக வளாகத்தில் ஃபேஷன் பாம் இந்தியா சார்பில் Mr & Miss தமிழ் மாநிலம் – 2024 நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
ஃபேஷன் பாம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோயல் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில்
தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டத்தில் இருந்து 25 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழு வகை சுற்றுகள் நடைபெற்று இறுதியாக ஆண்கள் பிரிவில் ஆறு நபர்களும் பெண்கள் பிரிவில் மூன்று நபர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதி சுற்று நிகழ்ச்சியில் Mr தமிழ் மாநில ஆண்கள் பிரிவின் பட்டத்தை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிரன் குமார் என்பவரும் Miss பெண்கள் பிரிவில் பட்டத்தை சென்னையை சேர்ந்த நித்தியஸ்ரீ என்பவர் வெற்றி பெற்றனர்.
இதே போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட அளவிலான வெற்றி பெற்றவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆத்ம சைதன்யா மகாராஜ் அவர்கள் கலந்துகொண்டு
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு Mr & Miss தமிழ் மாநிலம் -2024 என்ற பட்டத்தை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாடலிங் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் பேஷன் ஷோ










