இளங்குரல் முப்பெரும் விழா.

சென்னை,

கோயம்பேட்டில் உள்ள சிம்சன் ஹோட்டலில் இடம் குரல் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இளம்குரல் 10ஆம் ஆண்டு துவக்க விழா இளம்குரல் News App அறிமுக விழா மற்றும் இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா என மூன்று நிகழ்ச்சிகள் என முப்பெரும் விழா விமர்சியாக நடைபெற்றது.

இளம்குரல் நிறுவன ஆசிரியர் & இளம்குரல் அறக்கட்டளை தலைவர் இளம்குரல் சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களும் இளம்குரல் தலைமை ஆசிரியர் சமூக சேவகர் ஆர். கோபாலகிருஷ்ணன் அவர்களும் இளம்குரல் தலைமை ஆசிரியர் மருத்துவ சேவகர் Dr.R.நரேஷ் குமார் அவர்களும் எவர்வின் பள்ளி குழுமத்தின் தலைவர் புருஷோத்தமன் அவர்களும் சமூக ஆர்வலர் இளம்குரல் முதன்மை ஆசிரியர் சௌந்தர பாண்டியன் அவர்களும் தமிழ்நாடு காவல்துறை காவல் ஆய்வாளர் ராஜேஷ் பாபு அவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை நிறுவனர் இளைய கட்டபொம்மன் அவர்களும் ஸ்ரீ ஜெய கிருஷ்ணா நடனப்பள்ளி நிறுவன கேசவராஜா பாலகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் இளம்குரல் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பத்தாயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இளம்குரல் News App அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இளம்குரல் சார்பில் இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளம்குரல் நிருபர்கள் மற்றும் இளம்குரல் அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.