சென்னை ரெட்டில்ஸ் அருகே உள்ள ஸ்டாக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 15வயதுக்கு உட்பட்ட ஆடவர் கிரிக்கெட் டி30 போட்டி நடைபெற்றது.
மாஸ்டர் கிரிக்கெட் கிளப் நிறுவனர் ஷம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்
சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 4கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.
தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் 26/10/23 இன்று இறுதி போட்டி நடைபெற்றது.
இறுதில் இன்று யூனிக் கிரிகெட் அகடமி மற்றும் சென் ஜோசப் கிரிக்கெட் அகடமி இறுதிச்சுற்றில் போட்டியிட்டனர்.
இறுதிப்போட்டியில் யூனிக் கிரிகெட் அகடமி அணியினர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றி பெற்ற யூனிக் கிரிக்கெட் அகாடமி அணியனருக்கு பதக்கங்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மற்றும் சிறந்த ஆட்டக்காரர் தருண் சிறந்த பந்துவீச்சாளர் சுதீர் ஆகியோருக்கு பதக்கங்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஆர்வலர்கள் , பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.









