நல்லாண் பிள்ளை பெற்றாள் அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய வருடாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மங்கல இசை உடன் தொடங்கிய நிகழ்ச்சி மீனாட்சியம்மன் உடலுறை சொக்கநாதர் திருக்கோயிலில் இருந்து கருப்பசாமி காவலுடன் ஐயப்ப சுவாமிக்கு திருவாபரண பெட்டி  கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து வேள்வி பூஜை மஹா பூர்ணாஹிதி மலர் அலங்காரம் மகா தீபாரதனையும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

 அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் மற்றும் மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட பூ அலங்காரத்தில் ஸ்ரீ அருள்மிகு தர்ம சாஸ்தா வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மாலை 6மணி அளவில் 100க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஐயப்ப பக்தர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.