சென்னை,
வில்லிவாக்கம் திருப்பதி திருக்குடை வரவேற்பு குழு சார்பில் வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயில் அருகே பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் விமர்சியாக நடைபெற்றது .
மதியம்12 மணி அளவில் மாபெரும் சமபந்திவிருதும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மாலை 4 மணி அளவில் சின்மய மிஷின் ஆன்மீக அமைப்பின் சார்பில் சுவாமி சுரேஷனந்தா சுவாமிகளின் வழிகாட்டுதலி்ல் 108 ஹோமகுண்டம் வைத்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட குடும்ப நல வேள்வி பூஜை நடைபெற்றது.
மேலும் இரவு பாரதநாட்டிய மற்றும் ஆன்மீக சொற்ப்பொழிவு , பட்டிமன்றம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அவர்களும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வில்லிவாக்கம் ஜவகர்பாபு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இரவு திருப்பதி திருக்குடை வில்லிவாக்கம் செளமிய தாமோதர பெருமாள் கோயிலுக்கு அருகே வருகை தந்தது
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் போட்டு திருக்குடையே வரவேற்றனர் அதனை தொடர்ந்து திருக்குடை தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருப்பதி திருக்குடை வரவேற்பு குழு வில்லிவாக்கம் பகுதி நிர்வாகிகள் பார்த்தசாரதி. ராஜாகுமார் . சீனிவாசன். சரவணன். வினோத் பவன்சாய் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த ஆன்மீக பெருவிழா நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.









