விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் செத்தவரை கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் அவர்களின் அவதார திருநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 5மணிக்கு கோ பூஜையும் அதனை தொடர்ந்து 108 மூலிகை வேள்வி ஆராதனையும் காலை 10 மணி அளவில் கலச பூஜையும் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் 11 மணிக்கு மலர் அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் 100க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு பாத பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் அவர்கள் பக்தர்களுக்கு அருளோசி பிரசாதமும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் திருவண்ணாமலை சென்னை புதுச்சேரி கள்ளக்குறிச்சி கடலூர் வேலூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆசிரமத்தின் சார்பாக காலை முதலே பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது.









