சென்னை அமைந்தகரையில் இயக்கி வரும் எம் ஆர் மருத்துவமனை சார்பில் அண்ணா நகர் பகுதியில் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

எம் ஆர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.M.R.முரளிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாம் நிகழ்ச்சியில்

சிறப்பு விருந்தினர்களாக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr. V.கலாநிதிவீராசாமி, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் M.k.மோகன் சென்னை மாநகராட்சி 8ஆவது மண்டல குழு தலைவர் K.P.ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்
எம் ஆர் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன் ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டார், இதன் பின்பு இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ம்.க்.மோகன் அவர்களால் பழவகைகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது ..

முன்னதாக குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் V.கலாநிதிவீராசாமி பேசுகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இல்லம் தேடி மருத்துவம் போன்று பல்வேறு நல திட்டங்களை மக்களுக்கு இலவசமாக கொண்டு சேர்க்கும் வகையில், திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதேபோல் தனியார் நிறுவனமான M.R.மருத்துவமனை நிறுவனர் டாக்டர் முரளி கிருஷ்ணன் அவர்கள் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்து பணியாற்றி வருகிறார்.இவரைப்போல பல தொண்டு நிறுவனங்கள் இதுபோன்று மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை அமைத்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது…
இவ்வாறு அவர் தெரிவித்தார்…