தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தமிழக கேரள எல்லையான குமுளி அருகே உள்ள அணைக்கரையில் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து கமிட்டி அரங்கில் 10/12/23 ஞாயிறு அன்று காலை 8 மணி முதல் மதியம் 3மணி வரை மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

சுமார் 300 க்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்த மருத்து முகாமில் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜப்பன் அவர்களும் துணை தலைவர் வல்சம்மை ஜெயப்பிரகாஷ் அவர்களும் இடுக்கி மாவட்ட பஞ்சாயத்து கமிட்டி சேர்மன் லாரிச்சன் அவர்களும் குமுளி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜோபின் ஆண்டனி அவர்களும் அரவிந்த கண் மருத்துவமனை நிகழ்ச்சி மேலாளர் சிவசக்தி பாலன் அவர்களும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் இளம்குரல் துணை ஆசிரியர் சிவா அவர்களும் இளம்குரல் மாவட்ட தலைமை நிருபர் அருண் அவர்களும் மருத்துவ முகாமுக்கான சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

இந்த கண் சிகிச்சை மருத்துவ முகாமில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளைஞர்கள் மகளிர்கள் மாணவ மாணவிகள் என பல ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கண் சிகிச்சை முகாமில் 20 நபர்கள் மேல் சிகிச்சைக்கு தேனி அரவிந்த கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.