சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு கனரா வங்கி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சமூக சேவகர் வில்லிவாக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

கனரா வங்கி வடக்கு மண்டல துணை பொது மேலாளர் திருமதி.விமலா விஜயபாஸ்கர் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா நகர் மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் அவர்கள் கலந்துகொண்டு சுமார் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

மேலும் இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கனரா வங்கி தலைமை மேலாளர் சிவகுமார் மேலாளர் ஹரிகிருண்ணா , மணிமாறன் , இன்டீரியல் ஆறுமுகம்,கோனிகா பாஸ்கர் , நாகராஜ், பாலாஜி மாரிகண்ணன் , மற்றும் பலராம்புரம் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்தனர்.

அப்பகுதியில் உள்ள சுமார் 250-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று வெள்ள நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.