ஆர்.சி. ஹவுஸ்டன் வீட்டு உரிமையாளர் நல சங்கம், ஸ்ரீ வரதப்பா சிட் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், DSV எண்டர்பிரைசஸ், செவன் ஸ்டுடியோ மற்றும் 7 நோட்ஸ் த ஸ்கூல் ஆஃப் மியூசிக் ஆகியவற்றின் இணை முன்னெடுப்பில் நடைபெற்ற 2026 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற்றது.

2026 ஆம் புத்தாண்டை வரவேற்பு செய்யும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியும் கரோக்கி இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை ஆர்.சி. ஹவுஸ்டன் வீட்டு உரிமையாளர் நல சங்க நிர்வாகிகள் — தலைவர் திருமதி அபிராமி, துணைத் தலைவர் திரு. முத்துக்குமார், பொதுச் செயலாளர் திரு. ஹரிகிருஷ்ணன், இணைச் செயலாளர் திரு. மதன்குமார், பொருளாளர் திரு. ஜூலியன் சக்கரியாஸ், இணை பொருளாளர் திரு. இஷ்தியாக் அகமது ஆகியோர் இணைந்து சிறப்பான மேற்பார்வை செய்து, ஒத்துழைப்பு வழங்கினர்.

இவ்விழாவில் ஸ்ரீ வரதப்பா சிட் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் DSV எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் திருமதி தேவி தனசேகர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சென்னை மாவட்டத் தலைவர், திரு. வி. தனசேகர், மற்றும் செவன் ஸ்டுடியோ உரிமையாளர் திருமதி மெர்லின் செல்வா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

திரை இசைப் பாடகர்கள் — செவன் ஸ்டுடியோ செல்வா, 7 நோட்ஸ் மியூசிக் ஸ்கூல் உரிமையாளர் மெர்லின் செல்வா, விந்தை பாரதி, முகவரி சக்திவேல், ஆசிரியர் வ. தனசேகர், கண்மணி, சுமதி, ஜெயஸ்ரீவாணி, ஷைனி செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இனிய பாடல்கள் பாடி விழாவை சிறப்பித்தனர்.

ஆர்.சி. ஹவுஸ்டன் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் — பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு, 2026 புத்தாண்டை கேக் வெட்டி, மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்றனர்.