இளம்குரல் அறக்கட்டளை சார்பில் Dr.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர் தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரில் உள்ள காமகோடி திருமண மண்டபத்தில் இளம்குரல் அறக்கட்டளை சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் மாணவர் தின விழா கொண்டாடப்பட்டது.

இளம்குரல் அறக்கட்டளை தலைவர் இளம்குரல் சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டின் நடைபெற்ற நிகழ்ச்சியில்

சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் ராஜு அவர்களும் வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் அருள் மணிமாறன் அவர்களும் சமூக சேவகர் இளம்குரல் தலைமை ஆசிரியர் ஆர். கோபாலகிருஷ்ணன் அவர்களும் மருத்துவ சேவகர் இளம்குரல் தலைமை ஆசிரியர் டாக்டர். நரேஷ்குமார் அவர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் அவர்களும் சமூக சேவகி இளம்குரல் தலைமை தொகுப்பாளர் அன்பு பொற்செல்வி அவர்களும் சமூக ஆர்வலர் இளம்குரல் ஆலோசகர் ராஜா அவர்களும்
வில்லிவாக்கம் பார்ம்ஸ் லேப் உரிமையாளர் கிருஷ்ணன் அவர்களும் பிரியா சைக்கிள் மார்ட் உரிமையாளர் இளம்குரல் ஆலோசகர் வெங்கடேசன் அவர்களும்
பிரியாஸ் லேடிஸ் டிரஸ் வேர்ல்ட் உரிமையாளர் இளம்குரல் தலைமை ஆலோசகர் சந்தூர் மட்டா அவர்களும்
கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் Dr.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மலர் தூவி மரியாதை செய்தனர் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

மேலும் நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் இளம்குரல் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் இளம்குரல் நிருபர்கள் அறிவுடைய நம்பி சரவணன் ராஜ்குமார் தினேஷ் ஆகியோரும் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.