சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை நவம்பர்16ல் நடை திறப்பு..

சபரிமலை கார்த்திகை மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை திருவிழாவிற்காக வரும் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. 17ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி கோவில் திறக்கப்பட உள்ளது. 17ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு திருவிழா நிறைவுபெறும்.

சபரிமலை வரும் பக்தர்கள் https://sabarimalaonline.org எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.