சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள எம் ஆர் மருத்துவமனை சார்பில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களும் எம் ஆர் மருத்துவமனை ஊழியர்களும் கையில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர்.
மேலும்
இந்நிகழ்ச்சியில் M.R. மருத்துவமனையின் தலைமை மேலாளர் புருஷோத்தமன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
M.R.மருத்துவமனை தலைமை செவிலியர் கலையரசி நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்றார்
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர். ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.
டாக்டர் நூருல் அமீன் மற்றும் மருத்துமனையின் துறை தலைமை அதிகரிகள் கலையரசி, சாய் மகேஷ்வரி, சுஜா, டாலி ஸ்டெல்லா, மோலி தாமஸ் மற்றும் சவுந்தரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் டாக்டர் நூருல் அமீன் மற்றும் டாக்டர் புவனப்பிரியா சக்கரை நோய் பற்றி உரையாற்றினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் மாதவன், டாக்டர் பத்ரிநாத்,
அகரம் ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் டாக்டர் ஆல்பர்ட் ஜோஸ், செக்ரட்டரி சதீஷ் SWOTT தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்
சமீர், Bumble Bee டிஜிட்டல் மீடியா மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீராம், அமைந்தகரை காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு நிர்வாக அதிகாரி யாபேஸ் பிரின்ஸ் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை சுமையா ராஜ் தொகுத்து வழங்கினார்.
மேலும் இந்த சர்க்கரை நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் மருத்துவ துறை அதிகாரிகள் மருத்துவர்கள் முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்











