சென்னை புரசைவாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் பக்தன் ஜி அவர்களும் தமிழ்நாடு சேவா பாரதி மாநில தலைவர் ர.பு. மனோகர் ஜி அவர்களும் இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் ஜி அவர்களும் இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோ ஜி அவர்களும் இந்து ஆட்டோ ஓட்டுனர் முன்னணி மாநில நிர்வாகி சுரேஷ் ஜி அவர்களும் சேவை இன்டர்நேஷனல் அமைப்பின் பாலாஜி மற்றும் அதியன் அவர்களும் தமிழ்நாடு சேவா பாரதி நிர்வாகி அருண்குமார் அவர்களும் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண தொகுப்பை வழங்கினார்கள்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.