சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இளம்குரல் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில்
இளம்குரல் 11ஆம் ஆண்டு துவக்க விழா , விவேகா புக் ஆப் ரெக்கார்ட் அறிமுக விழா மற்றும் இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா என மூன்று நிகழ்ச்சிகள் முப்பெரும் விழாவாக நடைபெற்றது

இளம்குரல் CEO இளம்குரல் சுரேஷ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

இளம்குரல் 11வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 2024 – 2025 முழுவதும் 11ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது அதனை தொடங்கும் விதமாக 11 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விவேகா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற புதிய நிறுவனம் அறிமுக விழா நடைபெற்றது.

மேலும்
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நல்வாழ்வு துறை அமைச்சர் H.V.ஹண்டே அவர்களும் இளம்குரல் தலைமை ஆசிரியர் சமூகசேவகர் ஆர்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் இளம்குரல் தலைமை ஆசிரியர் மருத்துவ சேவகர் Dr. ஆர்.நரேஷ்குமார் அவர்களும் பிரபல சின்னத்திரை நடிகை பிரேமி வெங்கட் அவர்களும் காவல் உதவி ஆய்வாளர் அபர்ணா அவர்களும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் வழக்கறிஞர் சத்தியசீலன் அவர்களும் இளம்குரல் துணை ஆசிரியர் பொற்செல்வி அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனைப்படுத்த சாதனையாளர்களுக்கு இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கி கௌரவித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இளம்குரல் இமயங்களாக இருக்கக்கூடிய விவேகானந்தர்,நேதாஜி, பாரதியார், அப்துல்கலாம், அம்பேத்கர் ஆகியோர் பெயர்களில் விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முன்பாக கலை நிகழ்ச்சி மற்றும் கராத்தே சிலம்பம் வாள்வீச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இளம்குரல் நிருபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.