பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. அடிக்கடி ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.