சென்னை பெரவள்ளூரை சேர்ந்த டான் போஸ்கோ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் ரா.சரண்ஜீத் 2 மணி நேரத்தில் 264 முக்கோண கண சதுர புதிரை மிதிவண்டியை தொடர்ச்சியாக ஓட்டியவாறு கால்களை கீழே வைக்காத நிலையில் தீர்வு கண்டதனை “வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன்” அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கி உள்ளது. சாதாரண நிலையில் முக்கோண கன சதுர புதிருக்கு தீர்வு காண்பதே கடினம் என்ற நிலையில் இந்த இளம் வயது சிறுவன் மிதிவண்டியை ஒட்டிக்கொண்டு தீர்வு காண சுமார் இரு வருட காலம் பயிற்சியை மேற்கொண்டு உள்ளார் மேலும் இந்த சாதனைக்கு வழிகாட்டுதலாக இருந்த திரு இளையராம் சேகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சாதனைச் சிறுவன் கூறுகையில் “இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும், பள்ளி நிறுவனம் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் என்னை ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் “என்று கூறியுள்ளார்









