சென்னை,

மயிலாப்பூர் உள்ள பாரதிய வித்யாபவன் அரங்கில் ” தி டான்ஸ் இந்தியா” கலை & பண்பாட்டு மாத இதழ் அறிமுக விழா மற்றும் ஸ்ரீ தியாகராஜ வைபவம் ஆகிய இரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மூத்த நடன கலைஞரும் குரு சிக்கில் வசந்தகுமாரி அவர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

மேலும் AL 4 டிரஸ்ட் சூரியநாராயணன் , மலர்வனம் பாட்டும் பரதமும் ஆசிரியர்
ராமக்கிருஷ்ணன் அவர்களும் சக்தி சங்கீத சபா உரிமையாளர் திருமதி கலாவதி மாணிக்கவாசகம், ஆகியோர் கலந்து கொண்டு மாத இதழ் பிரதிகளை பெற்று கொண்டார்கள்.

விழா எற்பாடுகளை தி டான்ஸ் இந்தியா தமிழக நிர்வாகி மற்றும் ஸ்ரீ ஜெயககிருஷ்ணா நடன பள்ளி நிறுவனர் டாக்டர் கேசவராஜா பாலகிருஷ்ணன் எற்பாடு செய்து இருந்தார்.

நிகழ்ச்சிகளுக்கு வந்து இருந்த விருந்துனர்களை ஸ்ரீ ஜெயகிருஷ்ணா நடன பள்ளி இணை இயக்குநர் திருமதி ஷீலா கேசவராஜா வரவேற்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியுடன் ஸ்ரீ தியாகராஜ வைபவம் பெயரில் நடன, விணை மற்றும் வாய்பாட்டு கச்சேரி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் யவ கலா வித்யா குமாரி நிஷ்ரேயா வரலஷ்மி தியாக பிரம்மதின் பல பாடல்களை நடனத்தில் சிறப்பாக வழங்கினார்.