எம்.ஆர் மருத்துவ குழுமத்தின் சார்பில் மாபெரும் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எச் 24 மணிநேர மருத்துவ மையத்தின் சார்பில் மகளிர் கான சிறப்பு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
எம்.ஆர் மருத்துவ குழுமத்தின் நிர்வாக இயக்குனர்
Dr. M .R முரளி கிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில்
மகளிர்க்கான சிறப்பு மருத்துவமும் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மகளிர்க்காண பல்வேறு மருத்துவ ஆலோசனைகளும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் எடை பரிசோதனை, உணவு பழக்க வழக்கம் . உள்ளிட்ட பல்வேறு பரிசோதனங்களும் மற்றும் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
வில்லிவாக்கம் பல்வேறு பகுதியில் உள்ள மகளிர்கள் மாணவிகள் இளம் பெண்கள் என பலர் ஆர்வத்துடன் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.









