சில வேலைகளை செய்யும்போது சரியான தோற்ற நிலையை பின்பற்றாமல் இருந்தால் தசைநார்களில் பாதிப்பு ஏற்படும். இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் அதிக வலி உண்டாகும். அதை சில எளிய பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும்.

உடலில் உள்ள தசைகளையும், எலும்புகளையும் இணைக்கக்கூடிய நார்த்தன்மையுள்ள இணைப்பு திசுக்களையே ‘தசைநார்கள்’ என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் ‘லிகமென்ட்’ என்று அழைக்கிறார்கள். தசைநார்கள் ‘கொலாஜன்’ எனும் புரதத்தால் ஆன இழைகளாகும். இவை அதிக வலிமையும், அதிர்வை தாங்கும் தன்மையும் கொண்டவை. உடலின் இயக்கத்துக்கு தசைநார்கள் முக்கியமானவை.